விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்...!!

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிக்சை பெற்ற தேவி என்ற பெண் உயிரிழந்ததால் அவரின் உடல் உறுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிக்சை பெற்ற தேவி என்ற பெண் உயிரிழந்ததால் அவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்  கடந்த  சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நோக்கி சென்ற அரசு பேருந்து விருதுநகரிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த சொகுசு காரும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நவீன் குமார் என்பவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த 9 பேர் தீவிர சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்நிலையில் மருத்துவமைப்பினையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த  ராஜபாளையத்தைச் சேர்ந்த தேவி என்ற இளம்பெண் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தேவி தெரிவித்ததையடுத்து அவரது விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.