இல்லத்தரசி பணியை கணவரின் பணியோடு ஒப்பிட முடியாது – உயர்நீதிமன்றம்

The High Court ordered that the wife has equal share in the property purchased by the husband.

Chennai High Court

கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என உயர்நீதிமன்றம் உத்தரவு.

வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர்சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை  உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார்.

இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, இல்லத்தரசிகள் பணியை கணவனின் பணியோடு ஒப்பிட முடியாது. இல்லத்தரசிகளின் பணி 24 மணி நேர பணி கணவரது பணி 8 மணிநேரம் மட்டும் தான். குழந்தைகளை கவனிப்பது, குடும்ப நிர்வாகம் என இல்லத்தரசிகள் 24 மணி நேரமும் வேலை பார்க்கின்றனர்.

மனைவி குடும்பத்தை கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது. வருவாய் ஈட்டி கணவர்தன் தன் பங்கை வழங்கினாலும் குடும்பத்தை கவனித்து தனது பங்களிப்பை மனைவி வழங்குகிறார். எனவே கணவர் வாங்கும் சொத்தில் மனைவிக்கு சம பங்கு உள்ளது என தெரிவித்து இந்த வழக்கை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.