அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – கல்லூரி கல்வி இயக்ககம்!

Announcement that you can apply online for postgraduate courses in government art colleges in Tamil Nadu from tomorrow.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்.1ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.