திருமண வரன்களை தடுப்பவர்களுக்கு எதிராக நூதன பேனர்களை வைத்த வாலிபர்கள்! வைரலாகும் புகைப்படம்!

குமரி மாவட்டம், இரணியல் அருகே உள்ள தலக்குளம் என்ற பகுதியில் ஒரு பேனர் கட்டப்பட்டுள்ளது. அந்த பேனரை, அந்த வழியாக செல்லும் மக்கள் அனைவரும் பார்த்து செல்கின்றனர். அந்த பகுதியில் திருமணமாகாத வாலிபர்கள் இணைந்து தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி பேனர் வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
அந்த பேனரில் புதுவிளை இளைஞர்களுக்கு வரும் திருமணவரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி! நன்றி! நன்றி! என குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்களது நற்பணி தொடருமானால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர், புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திருமண வரங்களை தடுப்பவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களுக்கு வாகன வசதி செய்தி தரப்படும் என்றும், இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தன. இந்த பேனர் குறித்து அப்பகுதி மக்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் உள்ள பல வாலிபர்களுக்கு திருமண வரன் வரும்போது, சிலர் அவர்களை பற்றி அவதூறு பரப்பி வந்து, வரன்களை திருப்பி அனுப்பி விடுவதாக கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் தான் இதுபோன்ற பேனர்களை வைத்துள்ளதாக கூறியுள்ளனர். தற்போது இந்த பேனர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025