புலி துரத்தியதால் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடிய இளைஞர்கள்!வைரலாகும் வீடியோ!

நீலகிரி மாவட்டத்தில் பந்திப்பூர் என்ற இடம் கேரளா,கர்நாடகா எல்லையில் உள்ளது.இந்த இடம் தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களை மையமாக கொண்டு அமைந்துள்ளது.இந்த இடம்

நீலகிரி மாவட்டத்தில் பந்திப்பூர் என்ற இடம் கேரளா,கர்நாடகா எல்லையில் உள்ளது.இந்த இடம் தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களை மையமாக கொண்டு அமைந்துள்ளது.இந்த இடம் காட்டுப்பகுதியில் உள்ளது.

அதனால் இந்த பகுதி யானை,கரடி உட்பட பல விலங்குகள் நடமாடும் பகுதியாக அமைந்துள்ளது.இந்த பகுதியில் நேற்று இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது செல்லும் வழியெல்லாம் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டு சென்றுள்ளனர்.

அப்போது தூரத்தில் மரங்களுக்கு நடுவே புலி ஒன்று இவர்களை தாக்க வேகமாக வந்து கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே அந்த இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தை மிகவும் வேகமாக ஓட்டியுள்ளனர்.

ஆனாலும் இவர்களின் வேகத்திற்கு ஈடு கொடுத்து புலி துரத்த ஆரம்பித்துள்ளது.இவர்கள் புலிக்கு அருகே வேகமாக சென்று கொண்டிருந்ததால் புலியால் ஒரே பாய்ச்சலில் இவர்களை தாக்க முடியவில்லை.

அதன் காரணமாக புலி மீண்டும் காட்டிற்குள் சென்று விட்டது.உயிரை கையில் பிடித்து கொண்டு வாகனத்தை வேகமாக ஓட்டினாலும் செல்போனில் அங்கு நடக்கும் செயல்களை வீடியோ எடுத்தபடியே வந்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

unknown node