தெலங்கானா அரசு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா..? என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? என கேள்வி எழுப்பியது.
இதைத்தொடர்ந்து,பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு கூடுதல் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா..? நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் தெலுங்கானா காட்டும் வழியையாவது தமிழகம் பின்பற்ற வேண்டும் என பதிவிட்டு, முதலமைச்சரை டேக் செய்துள்ளார்.
unknown nodeதெலுங்கனா மாநிலத்தில் பொதுத்தேர்வு இல்லாமல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள் என இன்று மாலை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.