இவர்கள் தான் அதிகமாக கொரோனாவால் உயிரிழக்கின்றனர்- முதல்வர் .!

ஏற்கனவே சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கொரோனாவால் இறப்போரில் அதிகம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

ஏற்கனவே சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கொரோனாவால் இறப்போரில் அதிகம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை  ஈரடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை  இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாலத்தை திறந்து வைத்தார்.

அப்போது, பேசிய முதல்வர் கொரோனாவால் ஏற்படும் இழப்புகளை அரசு மறைக்கவில்லை. தினந்தோறும் அனைத்து விபரங்கள் வெளிப்படையாக அரசு அறிவிக்கிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. மேலும்  கொரோனாவால்  மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

ஏற்கனவே சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கொரோனாவால் இறப்போரில் அதிகம் என என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இவர்கள் தான் அதிகமாக கொரோனாவால் உயிரிழக்கின்றனர்- முதல்வர் .!