திருமாவளவனின் சகோதரி மறைவு – மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

திருமாவளவனின் சகோதரி மறைவு  இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்.

திருமாவளவனின் சகோதரி மறைவு  இரங்கல் தெரிவித்த மு.க.ஸ்டாலின்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின்  சகோதரி பானுமதி என்கிற வான்மதி ( 63) சென்னை கே.கே.நகரில் வசித்து வந்துள்ளார். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களுக்கும் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி திருமதி பானுமதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

தொல்.திருமாவளவனை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினேன். அவரது குடும்பத்தினர் அனைவர்க்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

unknown node