1.15 கோடியாக உயர்ந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இதுவரை 1.15 கோடிக்கும் அதிகமாகி உயர்ந்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இதுவரை 1.15 கோடிக்கும் அதிகமாகி உயர்ந்து கொண்டே செல்கிறது.

கொரோனாவின் தாக்கம் இன்று வரையிலும் குறையாத நிலையில், தனது வீரியத்தை கூட கொரோனா குறைத்து கொள்ள விரும்பவில்லை. இதுவரை உலகளவில், 11,559,213 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 536,786 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,535,902 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் புதிதாக 175,499 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒரே நாளில் 3,572 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 44,82,990 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.