உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
சூடானில் ராணுவ மோதல் :
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில், துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருகிறது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை :
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த மோதலில் கிட்டத்தட்ட 270 பேர் உயிரிழந்துள்ளனர். 2,600 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் அடங்குவர்.
150 பேர் மீட்பு :
இதில், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் சூடானில் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து இந்தியர்கள் மற்றும் அதிகாரிகள் 150-க்கும் மேற்பட்டோரை சவுதி அரேபியா மீட்டு வந்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கை, இராணுவத்தின் பிற கிளைகளின் ஆதரவுடன் சவுதியின்கடற்படைப் படைகளால் இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
unknown nodeசூடானில் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய கலவரத்திற்கு பின்னர், அங்கு இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். அறிக்கையில் குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், இந்தியா, பல்கேரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், கனடா மற்றும் புர்கினா பாசோ ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்த 91 சவூதி குடிமக்கள் மற்றும் சுமார் 66 பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தொடரும் வெளியேற்றம் :
மேலும், வரும் நாட்களில் மீட்பு மற்றும் வெளியேற்றங்கள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகியவை இராணுவ ஜெட் விமானங்களைப் பயன்படுத்தி கார்ட்டூமில் இருந்து தங்கள் நாட்டினரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.