துபாய் :பிரிட்டனைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா என்கிற 18 வயதுடைய சிறுவன், பள்ளி விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு 17 வயது சிறுமியுடன் உடலுறுவுகொண்டதற்காக சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு லண்டனில் உள்ள டோட்டன் ஹாமைச் சேர்ந்த மார்கஸ் ஃபகானா, பள்ளி விடுமுறையை துபாயில் கழிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அந்த சிறுவன் கடந்த செப்டம்பர் மாதம் அங்கிருந்த 17 வயதுடைய சிறுமியுடன் காதல் ஏற்ப்பட்டுள்ளது.
பின்னர், அந்த காதல் மோகத்தால் தவறான பாதைக்கு சென்ற அந்த இளம் ஜோடி, உடலுறுவு கொண்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், அதனை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த தவறான புகைப்படங்கள் மற்றும் அரட்டைகளைப் பார்த்த சிறுமியின் தாய், துபாய் காவல்துறையிடம் புகாரளித்தார். பின்னர், அந்த புகாரை பெற்று கொண்ட துபாய் போலீசார், சிறுவனை அவரது ஹோட்டலில் கைது செய்தனர்.
இங்கிலாந்தில் 18 வயது மற்றும் சிறார்களுக்கு இடையிலான உறவுகள் சட்டப்பூர்வமானது தான். ஆனால், அதே துபாயில் இது போன்ற உறவுகள் கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார். தற்பொழுது, அந்த சிறுவன் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
