ரஷ்ய வணிக வளாகத்தில் சுடுநீர் குழாய் வெடித்ததில் 4 பேர் பலி, 10 பேர் காயம்..!

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் 150 கடைகள் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சூடான தண்ணீர் குழாய் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர்

HotWaterPipeBurst

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் 150 கடைகள் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சூடான தண்ணீர் குழாய் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும் மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மேயர் செர்ஜி சோபியானின் கூறினார்.