காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தால் 400 பேர் பலி..5,000 பேர் மாயம்..!!

CongoFloods

கடந்த 1 வரமாக கிழக்கு காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்பட்டது. இந்த கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 400 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 200 என கூறப்பட்ட நிலையில், தற்போது 400 க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களை மீட்பது மற்றும் உடல்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கோர வெள்ளத்தில் சில வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இடிந்து விழுந்தன. மேலும், சிலது  பாழடைந்தன.

ஏற்கனவே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,  இதில் சிக்கி இன்னும் 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

காங்கோ நாட்டில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கில் சிக்கி 400 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்