கலிபோர்னியா பாரில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி, 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கலிபோர்னியாவில் உள்ள பிரபல பார் ஒன்றில், ஓய்வுபெற்ற சட்ட அமலாக்கதுறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் பலியாகினர் மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 6 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற சட்ட அமலாக்க அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு சம்பந்தப்பட்ட மோதலில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025