உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் பலி!

ராணுவ தளம் மீது ராக்கெட் குண்டுகளை வீசி உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 63 ரஷ்ய வீரர்கள் பலி.

ராணுவ தளம் மீது ராக்கெட் குண்டுகளை வீசி உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 63 ரஷ்ய வீரர்கள் பலி.

ரஷ்யா – உக்ரைன் இடையே நீண்ட மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்தாலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டவில்லை. இதனால், ரஷ்யா மற்றும் உக்ரைன் மாறி மாறி ஏவுணை, ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் இரு நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கியதில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 63 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ராணுவ தளம் மீது ராக்கெட் குண்டுகளை வீசி உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 63 ரஷ்ய ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர்.

ரஷ்ய ராணுவம் தங்கியிருந்த கூடாரம் மீது ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது உக்ரைன் ராணுவம். இதில் பொதுமக்களில் சிலர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. மகிவ்கா நகரில் ராணுவ ஆயுத கிடங்கில் உக்ரைன் வீசிய குண்டு வெடித்ததால், கிடங்கில் உள்ள வெடி குண்டுகள் வெடித்துள்ளன. அதே நேரத்தில் கீவ் நகரத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.