பாதுகாப்பு படையினரால் மூன்று நாட்களில் 63 பயங்கரவாதிகள் சுட்டு கொலை ..!

In the past three days, 63 Taliban militants have been killed, including seven suicide bombers. 29 terrorists were also reported injured.

ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் தெற்கு மாகாணமான காந்தஹாரில் கடந்த மூன்று நாட்களில் ஏழு தற்கொலை படை உட்பட 63 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், 29 பயங்கரவாதிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (என்.டி.எஸ்) ஞாயிற்றுக்கிழமை, கூறுகையில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து அவர்களைக் கொன்றனர். என்.டி.எஸ் 03 பிரிவின் மோட்டார் குழு மாகாணம் முழுவதிலும் உள்ள தலிபான் தீவிரவாதிகளை தங்கள் சொந்த இடங்களில் வைத்து கொன்றுள்ளது.

கடந்த வாரம் ஆப்கானிய படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. டிசம்பர் 9 முதல், இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களில் 150 க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.