மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!

A magnitude 7.0 earthquake shakes the region of Acapulco in Mexico.

மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோவில் அருகே 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மெக்சிகோவில் பசிபிக் ரிசார்ட் நகரமான அகாபுல்கோ அருகே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகோ நகரத்தில் கிட்டத்தட்ட 200 மைல் தொலைவில் கட்டிடங்கள் குலுங்கின. 7.0 ரிக்டர் அளவிலான பதிவான இந்த நிலநடுக்கம் அகாபுல்கோவின் வடகிழக்கில் 17 கிலோமீட்டர் (சுமார் 10 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மெக்சிகோ நகரத்தில், தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நிலம் அதிர்ந்தது. ஆனால் மற்ற பகுதிகளில் குறைவாகவே தெரிந்தது என கூறப்படுகிறது. நில அதிர்வால் மக்கள் பீதியில் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். அந்த சமயத்தில் மழை பெய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என் மெக்ஸிகோ நகர அதிகாரிகள் கூறினர். இருப்பினும், சில சுற்றுப்புறங்களில் மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.