மெக்சிகோவில் விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு..!

வடக்கு மெக்சிகோவில் பார் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு.

வடக்கு மெக்சிகோவில் பார் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழப்பு.

வடக்கு மெக்சிகோவில் “எல் வெனாடிடோ” என்று அழைக்கப்படும் பார், மாநில தலைநகரான ஜகாடெகாஸிலிருந்து தென்மேற்கே 60 கிலோமீட்டர் (36 மைல்) தொலைவில் உள்ள ஜெரெஸின் நகராட்சியின் மையத்தில் உள்ளது.

இந்த நிலையில், இந்த கடைக்கு இரண்டு வாகனங்களில் மதுக்கடைக்கு வந்த பலத்த ஆயுதம் ஏந்திய நபர்கள் அங்கு துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

unknown node

இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.