ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

Taliban militants clash with security forces in 10 provinces in Afghanistan, killing 7 security personnel.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் 10 மாகாணத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதல்

இந்த மோதலில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு அமைப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்ட வண்ணம் தான் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலிபான் தளபதி உட்பட 18 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்பொழுது பாக்லான்  மாகாணத்தின் ஜூக்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 6 வீரர்கள் உள்பட 8 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள 10 மாகாணத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலில் இதுவரை 8 பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.