நட்சத்திர உணவகத்தில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய தம்பதி..! 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!

நட்சத்திர உணவகத்தில் இருந்து 14 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.

நட்சத்திர உணவகத்தில் இருந்து 14 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடிய தம்பதிகளை போலீசார் கைது செய்தனர்.

ஸ்பெயினின் கேசரெஸில் உள்ள நட்சத்திர உணவகத்தில் தம்பதியினர் இணைந்து 45 மது பாட்டில்களை ஹோட்டல் டவல்களில் சுற்றவைத்து திருடியுள்ளனர். கேசரெஸில் புகழ்பெற்ற உணவகமான அட்ரியோவில் மெக்சிகன் பெண்ணும் அவரது ருமேனிய-டச்சு நாட்டு காதலனும் கேசரெஸில் உள்ள புகழ்பெற்ற உணவகமான அட்ரியோவில் 45 மது பாட்டில்களை ஹோட்டல் டவல்களில் சுற்றவைத்து எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

முன்னாள் மெக்ஸிகன் அழகு ராணியான பிரிசிலா குவேரா என்ற பெண், போலியான சுவிஸ் பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி அவரது காதலன் கான்ஸ்டன்டின் டுமித்ரு என்பவருடன் அட்ரியோ உணவகத்தில் விருந்தினராக தங்கியிருந்துள்ளனர். அங்கே அவர்கள் இருவரும் உணவருந்திய பின்னர்  ஓய்வெடுக்க அறைக்கு செல்வதற்குமது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள அறையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர்.

இதையடுத்து அதிகாலை 2 மணி அளவில் பிரிசிலா வேலை செய்யும் ஊழியரை ஒரு சாலட் தயார் செய்து எடுத்துவர சொன்னார். ஆனால் அவர்கள் இருவரும் ஏற்கனவே 14 வகை உணவை சாப்பிட்டதால் ஊழியர் அவரது கோரிக்கையை மறுத்தார். இருப்பினும் பிரிசிலா தொடர்ச்சியாக கேட்டதால் சாலட் எடுத்து வர சம்மதித்தார். இதனிடையில் அவரது காதலன் கான்ஸ்டன்டின் மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியைத் திருடினார்.

சிறிது நேரத்தில் இருவரும் 45 மது பாட்டில்களை ஹோட்டல் டவல்களில் சுற்றவைத்து எடுத்துச்சென்றுள்ளனர். இதையடுத்து பாட்டில்கள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் பிரிசிலா குவேரா மற்றும் கான்ஸ்டன்டின் டுமித்ரு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்கள் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இருவர்க்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் திருடிச்சென்ற பாட்டில்களில் ஒன்று 1806 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அதன் மதிப்பு சுமார் $3,30,000 (ரூ.2.7 கோடி) ஆகும். பிரஞ்சு ஒயின் ஆலையான சேட்டோ டி ய்கெம்யில் தயாரிக்கப்பட்ட (Chateau d’Yquem) இரண்டு பாட்டில்களும், 1883 இல் தயாரிக்கப்பட்ட €45,000 (38 லட்சம் ) மதிப்புள்ள பாட்டிலும் இதில் அடங்கும்.

unknown node