வெறும் கையால் 73 மாடிகள் ஏறிய இங்கிலாந்து நபர்.! பதறிப்போன தென்கொரிய காவல்துறை.!

South korea building

தென் கொரியா நாட்டின் தலைநகரின் உள்ள கட்டடத்தில் ஒருவர் வெறும் கையால் ஏறியதால் அங்கு பரப்பரான சூழல் நிலவியது. 

தென் கொரியா நாட்டின் தலைநகரான செயலின் நகரின் உள்ள 123 மாடிகள் கொண்ட உலகின் 5வது மிக பெரிய கட்டிடமாக கருதப்படும் அந்த கட்டிடத்தின் மேல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் எந்தவித உபகரணமும் இன்றி வெறும் கையால் ஏறியுள்ளார்.

இதனை கண்டு தென் கொரியா மக்கள் அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு 90 காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபர் 73 வது மாடியை கடந்த பின்பு அவரை தடுத்து நிறுத்தி பத்திரமாக அங்கிருந்து மீட்டனர்.

அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கட்டிடத்தின் அளவு பார்ப்பதற்காக ஏறியதாகவும் கூறியுள்ளார் மேலும் இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு லண்டனில் இதே போல கட்டடத்தில் எந்தவித உபகரணமும் என்று ஏற முயன்று மூன்று மாதங்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்