கொரோனா வைரஸின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் 2 வருடங்களாக உலகை வாட்டி வதைத்து வரும் நிலையில் புதிது புதிதாக கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது. ஓமிக்ரானின் புதிய வகை வைரஸான BA.2.75 தற்போது இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
unknown nodeஅதேபோல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் BA.4 மற்றும் BA.5 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து தெரிவித்த உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கடந்த 2 வாரங்களில் கொரோனா தொற்று வழக்குகள் 30 சதவீதம் உலக அளவில் அதிகரித்துள்ளது.
நாம் இன்னும் நோய் கிருமிக்கு மத்தியில் இருக்கிறோம். BA.4, BA.5 அல்லது BA.2.75 என எந்த வகையான கொரோனா வைரஸாக இருந்தாலும் தொற்று தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். அதனால் முகக்கவசம் அனைவரும் அணிந்து கூட்டத்தை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.