பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல்..! 8 பேர் காயம்.!

பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

suicide bomber

பாகிஸ்தானில் பாதுகாப்பு வாகனத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் தொடரணி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 6 துணை ராணுவப் படையினர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். ஃபிரான்டியர் கார்ப்ஸ் (எஃப்சி) தலைமையகம் அமைந்துள்ள பெஷாவரின் ஆடம்பரமான குடியிருப்புப் பகுதியான ஹயதாபாத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

unknown node

பெஷாவர் கன்டோன்மென்ட் காவல் கண்காணிப்பாளர் வகாஸ் ரபீக் கூறுகையில், எஃப்சி கான்வாய் மீது நடந்த தாக்குதலில் துணை ராணுவப் படைகளின் இரண்டு வாகனங்கள் அழிக்கப்பட்டன மற்றும் ஆறு எஃப்சி வீரர்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர் என்று கூறினார்.

unknown node

மேலும், காயமடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இரண்டு வீரர்கள் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.