தன்னை விட 22 வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட 31 வயது நபர்.
குழந்தை வேண்டும் என எண்ணிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஏஞ்சலா டீம் ஆவார்.இவருக்கு தற்போது சுமார் 53 வயது ஆகிறது.இவர் நைஜீரியாவை சேர்ந்த மைக்கேல் என்ற 31 வயது நபரை தொலைகாட்சி நிகழ்ச்சி மூலம் சந்தித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏஞ்சலா 6 குழந்தைகளுக்கு பாட்டியாகிவிட்ட நிலையில் முதலில் இவர்களின் காதல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.மேலும் நைஜீரியாவில் தனது வேலையை உதறி தள்ளிய மைக்கேலுக்கு ஏஞ்சலா பணம் கொடுத்து உதவியுள்ளார்.
மேலும் மைக்கேலுக்கு அமெரிக்காவிற்கு வந்து தொழில் செய்து பெரிய பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.இந்நிலையில் பணத்திற்காகதான் தன்னை விட 22 வயது அதிகாமாக உள்ள ஏஞ்சலாவை மணக்க உள்ளாரா என்ற கேள்வி எழும்பின.
இந்த சூழ்நிலையில் மைக்கேல் என்னிடம் நிறைய பொய் கூறுகிறார்.அதனால் அவரை பிரிய நினைப்பதாக ஏஞ்சலா கூறியுள்ளார்.ஆனால் இருவருக்கும் சமாதானம் ஆன நிலையில் இருவரும் கடந்த 27-ம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
unknown nodeஇந்நிலையில் மைக்கேலுக்கு குழந்தை வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளனர்.ஆனால் ஏஞ்சலாவின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்காத நிலையில் தனது மகள் ஸ்கைலாவின் கருமுட்டையை கொண்டு செயற்கையாக குழந்தை பெறலாம் என எண்ணியுள்ளார்.
ஆனால் ஸ்கைலா இந்த செயலுக்கு ஒப்பு கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.