அமெரிக்காவில் 18 மணிநேரம் காரில் சிக்கிய 22 வயது இளம்பெண் பனியில் உறைந்து உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் மின்தடை மற்றும் பல உயிர்கள் இந்த பனிப்புயலுக்கு பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் 22 வயதான ஆன்டெல் டெய்லர் என்ற நர்ஸ், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது கார், பனியில் சிக்கிக்கொண்டது. அவரால் வெளியில் வரமுடியவில்லை, இதனால் காரினுள் சிக்கித்தவித்த டெய்லர், 18 மணிநேரம் காருக்குள்ளேயே இருந்து பனியில் உறைந்து உயிரிழந்துள்ளார்.
unknown node