ஆப்கானிஸ்தானில் வான்வெளி தாக்குதலில் 12 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர்  நடத்திய வான்வெளி தாக்குதலில் 12 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.   கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில்  தலிபான்

ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர்  நடத்திய வான்வெளி தாக்குதலில் 12 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில்  தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றுவருகிறது. இதனால் அமெரிக்காவின் நேட்டோ படைகள் தலிபான்களை ஒழிக்க ஆப்கான் படைகளுக்கு  ஆதரவு அளித்து வருகிறது.தொடர்ந்து போர் நடைபெற்று வருவதால் அதனை முடிவு கொண்டு வரும் விதமாக தலிபான்கள் மற்றும் அமெரிக்கா இடையே ஆப்கான் அரசின் உதவியோடு  ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த  ஒப்பந்தத்தின்படி மற்ற நாட்டு படையினரின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். ஆனால், ஆப்கானிஸ்தான் அரசின் படையினர் மீதான தாக்குதல் தொடரும் என்று தலிபான்கள் தெரிவித்தனர்.

எனவே தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தானின் அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான்  ஆப்கானிஸ்தான் விமானப்படையினர்  கந்தஹார் மாகாணம் ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள தலிபான் இடங்களை குறிவைத்து  வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 12 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.