அடேங்கப்பா! 2 ஆண்டுகளில் பறக்கும் ஏர் டாக்ஸி;241 மில்லியன் டாலர் முதலீடை பெற்ற வோலோகாப்டர்

Air taxi flying in 2 years; $ 241 million investment Volcopter

ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு தனியார் ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் வோலோகாப்டர் நிறுவனம்  சுமார்  241 மில்லியன் டாலர் முதலீடை பெற்றுள்ளது வோலோகாப்டர்.

இந்த நிதியைக்கொண்டு நகரங்களுக்கான பேட்டரி மூலம் இயங்கும் ஏர் டாக்ஸியான வோலோசிட்டியை சான்றிதழ்களுடன் அதன் முதல் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துகிறது.அதனால் சந்தையில் முன்னணி நிலையை அடைய முடியும் என எதிர்பார்க்கிறது.

ஏர் டாக்ஸி ஸ்டார்ட்அப் வோலோகாப்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஃப்ளோரியன் ரியூட்டர் ,வோலோட்ரோன் மற்றும் வோலோசிட்டி  என்ற இரண்டு ஏர் டாக்ஸி மாடல்களின் சேவைகள் சுமார் இரண்டு ஆண்டுகளில் தொடங்கும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் முதல் வழித்தட நகரங்களான “பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை துருவ நிலையில் உள்ளன .மின்சார விமான டாக்ஸிகளை  2024 ஒலிம்பிக்கிற்கு பாரிஸ் நிறுவ விரும்புகிறது,” என்றும்  கூறினார்.