அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மாவை 2 மாதங்களாக காணவில்லை என சந்தேகம்.!

Famous businessman Alibaba founder Jack Dough has reportedly been missing for two months. Did not come to any public places.

பிரபல தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜாக் மாவை இரண்டு மாதங்களாக காணவில்லை என்று தகவல் கூறப்படுகிறது.

சீனாவின் முக்கிய தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜாக் மாவை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜாக் மா 2 மாதங்களாக எந்த பொது வெளிக்கும் வரவில்லை என்றும் அவர் தொகுத்து வழங்கி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம், உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இ-காமர்ஸ் நிறுவனத்தில் சீனாவில் ஆய்வுகள் அதிகரித்த பின், அக்டோபர் மாத இறுதியில் ஜாக் மா-வின் தனது சொத்து மதிப்புகளில் இருந்து 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் வலைத்தளத்தில் அறிவிப்பின்படி, ஜாக் மா-வின் சொத்து மதிப்பு 61.7 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 50.9 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

இதனால் உலக பணக்கார பட்டியலில் ஜாக் மா, 25-ஆம் இடத்தில் இருந்து வருகிறார். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி, அலிபாபா நிறுவனத்தின் தனியுரிமை (Monopoly) நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சீன அரசு விசாரணையை தொடங்கியது. இதனால் அந்நிறுவனத்தின் பங்குகள் குறையத் தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தின் கடன், காப்பீடு மற்றும் செல்வ மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை சரிசெய்ய அதிகாரிகள் அலிபாபா நிறுவனத்தை கேட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.