அமெரிக்காவின் தொடக்கப்பள்ளியில், பெண் துப்பாக்கியால் சுட்டதில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் நாஷ்வில்லில் உள்ள தொடக்கப் பள்ளியில், பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 மாணவர்கள் படிக்கும் பிரஸ்பைடிரியன் பள்ளியான தி கோவனன்ட் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், மூன்று குழந்தைகளுக்கும் காயங்கள்ஏற்பட்டது.
unknown nodeபாதிக்கப்பட்டவர்கள் மன்ரோ கேரல் ஜூனியர் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதில் போலீசாருடன் நடந்த மோதலில் அந்த பெண்ணும் உயிரிழந்துவிட்டார்.
போலீசார் இது குறித்து கூறுகையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் 28 வயதுடையவர் என்றும் அவர் நாஷ்வில்லியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணுக்கும் பள்ளிக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், குழந்தைகள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக அமெரிக்கா, தாக்குதல் ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் அல்லது அவற்றை வாங்குவதற்கான வயதை 18 முதல் 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
unknown nodeஅதிக திறன் கொண்ட துப்பாக்கிகளை தடை செய்யுங்கள். துப்பாக்கிகளை விற்கும் போது, பின்னணிச் சோதனைகளை வலுப்படுத்துங்கள் என்று பைடன் கூறினார். இது யாருடைய உரிமையையும் பறிப்பதற்காக அல்ல, குழந்தைகளைப் பாதுகாப்பது பற்றியது. இது குடும்பங்களைப் பாதுகாப்பது பற்றியது, இது சமூகங்களைப் பாதுகாப்பது பற்றியது, நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகும் என்று அவர் மேலும் கூறினார்.