டாய்லெட் வழியாக சுரங்கம் தோண்டி, அதன்வழியே நுழைந்த திருடர்கள் ரூ.4.10 கோடி மதிப்புள்ள 436 ஐபோன்களை திருடிச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில், ஹாலிவுட் திரைப்படகாட்சி போல ஒரு துணிச்சலான திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் காபி கியர் ஷாப் வழியே, கொள்ளையர்கள் குளியலறைச் சுவரில் ஒரு துளை ஏற்படுத்தி, ஆப்பிள் ஸ்டாரின் பின்புறம் நுழைவதற்கு யூகம் வகுத்தது தெரியவந்துள்ளது.
சியாட்டிலின் உள்ளூர் செய்திச் சேனல், கிங் 5 நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, கொள்ளையர்கள் ஆப்பிள் ஸ்டோரின் பாதுகாப்பு அமைப்பையும் தாண்டி, பக்கத்து காபி ஷாப்பைப் பயன்படுத்தி, சுமார் $500,000 மதிப்புள்ள(சுமார் ரூ.4.10 கோடி) 436 ஐபோன்களை திருடியுள்ளனர்.
ஆப்பிள் ஸ்டோரின் குளியலறையில் கொள்ளையர்கள் உருவாக்கிய சுரங்கப்பாதையின் படத்துடன், காபி கடையின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் அட்கின்சனும் ட்விட்டரில் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்தார். சியாட்டில் காபி கியர் ஷாப், தங்களின் பூட்டுகளை புதிதாக மாற்றுவதற்கு $900 செலவழிக்க வேண்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் ஆப்பிள் ஸ்டோர்களில், சொந்த பாதுகாப்புப் பணியாளர்கள் இல்லை, மேலும் அவர்கள் தங்களது பாதுகாப்பாக ஸ்டோர் அமைந்திருக்கும் மால் வழங்கும் பாதுகாப்பையே நம்பியிருக்கின்றன, இதனால் திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.