#BREAKING: இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும்: ரஷ்யா எச்சரிக்கை..!

இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில்,  ரஷ்யா போரை தொடரும், அதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என ரஷ்ய  பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.  மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை உக்ரைன் மீது போர் தொடரும்.  உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனிடம் இன்னமும் ரஷ்யாவின் அணு ஆயுதத்தொழில்நுட்பம் உள்ளது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ தெரிவித்தார்.