#BREAKING : ஆப்கானிஸ்தானில் முடிவுக்கு வந்த போர்;தாலிபான்கள் அறிவிப்பு...!

#BREAKING: End of war in Afghanistan; Taliban announce ...!

ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம்  கைப்பற்றினார்கள். தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில்,அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில்,ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.இதனால்,ஆட்சி பொறுப்பு தாலிபான்கள் வசம் வந்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்ற தாலிபான்கள் முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.