வணக்கம் கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர்!

The PM of the United Kingdom Boris Johnson has congratulated the Tamils living in the UK and the Tamil doctors on the occasion of Thaipongal.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழில் வணக்கம் கூறி பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மருத்துவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று தமிழர்களின் புதிய வருட பிறப்பை கொண்டாடும் வகையில் தைப்பொங்கல் திருநாள் உலகின் பல இடங்களில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பொங்கல் திருநாளை ஒட்டி பல தலைவர்களும் அரசியல்வதிகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் தமிழில் வணக்கம் கூறி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் வாழ்த்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், வணக்கம் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். தானும் பிரிட்டனில் உள்ள தமிழ் மக்களுடன் இணைந்து தமிழர் திருநாளான தைப்பொங்கல் திருநாளை கொண்டாட இருப்பதாகவும், கொரோனா காலங்களில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றிய தமிழ் மருத்துவர்களின் உதவியை மறக்க முடியாது எனவும் நன்றி தெரிவித்தும் தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node