காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை...! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட போது, காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை.

ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்ட போது, காற்றில் பறந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் குடை.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள், ஒரு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொண்டார். அங்கு அவர், இளவரசர் சார்லஸின் இருக்கையின் அருகில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன் குடையை பிடித்திருந்தார். அப்போது, காற்று வேகமாக வீசியதால், அவரது குடை மேல் நோக்கி மடிந்தது. பின் அவர் அந்த குடையை சரி செய்தார். இந்த நிகழ்வு இளவரசர் சார்லஸ் மற்றும் அவரை சுற்றி இருந்தவர்களை கேளிக்கைக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில், தனது நிலையை எண்ணி பிரதமர் போரிஸ் ஜான்சனும் சிரிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node