இலங்கை கரையை கடக்கத் தொடங்கிய புரெவி.. திருகோணமலையை தாண்டியது ..!

The meteorological office said that the storm will cross the coast in Trincomalee and approach the Gulf of Mannar tomorrow morning.

புரெவி புயலானது இலங்கையில் உள்ள திருகோணமலை கரையை கடந்துள்ள நிலையில், நாளை காலை மன்னார் வளைகுடா பகுதியில் புரெவி நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை இரவு அல்லது மறுநாள் அதிகாலை பாம்பன் இடையே புரெவி கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் ஆறாம் கட்ட எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும். மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.