ரோபோ ஒன்று முரட்டுத்தனமாக சென்று குழந்தையை தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் நடந்து வரும் மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியில் ஜூலை 19-ம் தேதியன்று செஸ் விளையாடும் ரோபோ 7 வயது சிறுவனின் விரலை உடைத்தது.
செஸ் விளையாட்டில் ரோபோ அதன் செயலை முடிக்க தேவையான நேரத்தை காத்திருக்காமல் சிறுவன் ஒரு விரைவான நகர்வை மேற்கொண்டதற்காக சிறுவனின் விரல்களை அது உடைத்துள்ளது.
அங்கிருந்த சிலர் சிறுவனின் விரலை ரோபோவின் பிடியில் இருந்து விடுவித்து சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரஷ்யாவின் செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்மாகின் கூறுகையில், “சிறுவன் நலமாக இருப்பதாகவும், விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும்” கூறினார்.
unknown node