அமெரிக்க பூங்காவில் உள்ள மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜியின் சிலை காணாமல் போயுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குவாடலுபே பூங்காவில் அமைந்துள்ள மராட்டிய ஆட்சியாளர் சத்ரபதி சிவாஜியின் சிலை காணாமல் போனது நகர மக்களை வருத்தமடைய வைத்துள்ளது. சான் ஜோஸில் உள்ள குவாடலுபே நதி பூங்காவில் (Guadalupe River Park) அமைந்துள்ள இந்த சிலை ஜோஸின் சகோதரி நகரமான புனேவில் இருந்து பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இது வட அமெரிக்காவில் உள்ள சிவாஜி மகாராஜின் ஒரே சிலையாகும்.
unknown node“குவாடலுபே நதி பூங்காவில் உள்ள ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை காணவில்லை என்பதை எங்கள் சமூகத்திற்கு தெரிவிக்க நாங்கள் வருந்துகிறோம்,” என்று சான் ஜோஸின் பூங்காக்கள், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுப்புறச் சேவைகள் துறை (San José Parks & Rec) ட்வீட் செய்துள்ளது. மேலும் சத்ரபதி சிவாஜி குதிரையில் இருக்கும் சிலையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
unknown nodeசிலை எப்போது எடுக்கப்பட்டது என்கிற விவரத்தை பூங்காவின் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இப்போது சிலை காணாமல் போன இடத்தில் சிலையின் அடித்தளம் மட்டுமே உள்ளது. அமெரிக்க காவல்துறையினர் மற்றும் பூங்காவின் அதிகாரிகள் இணைந்து காணாமல் போன சத்ரபதி சிவாஜியின் சிலையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
unknown node