ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி!

In Russia, 17,906 new cases of coronavirus have been confirmed in the last 24 hours alone.

ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 17,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரையிலும் பரவி கொண்டே தன் காணப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா பலவகைகளில் உருவாகி தாக்கத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிலும் தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் ரஷ்யாவில் 17,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் எவ்வித அறிகுறியும் இல்லாமல் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் 466 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.