அடுத்த வாரம் பயன்பாட்டிற்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து.. பிரிட்டன் அரசு ஒப்புதல்!

The UK government has approved the Corona vaccine, a joint venture between Pfizer and Biotech and this vaccine comes to market.

ஃபைசர் – பயோன்டெக் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த மருந்து அடுத்த வாரம் முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்தவகையில், ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் ஃபைசர் – பயோன்டெக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுவந்தது.

இந்த கொரோனா தடுப்பு மருந்து 95 சதவீதம் வெற்றியடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் அரசு, இந்த கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்ததன் காரணமாக, இந்த மருந்துகள் அடுத்த வாரம் முதல் இங்கிலாந்தில் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தானது, 6 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.