அமெரிக்க விமான நிலையத்தில் இந்தியரின் பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு சாணம்!

A bag full of cow dung from an Indian man who went to the United States has been confiscated at the Washington airport.

அமெரிக்காவிற்கு சென்ற இந்தியர் ஒருவரிடம் இருந்து பை நிறைய மாட்டு சாணம் வாஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே மக்கள் தடுப்பூசி போடா வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும். சமூக விதிகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு முறைகளில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இயற்கை முறையில் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாக்கவும் சில இயற்கையான வழிமுறை கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில ஆவி பிடிப்பது நாட்டு மருந்து வகைகளை உட்கொள்வது, கபசுரக் குடிநீர் குடிப்பது ஆகிய இயற்கை வழிமுறைகள் பெருமளவில் கையாண்டு வரப்படுகிறது.

ஆனால் ஒரு புறம் மாட்டு சாணத்தை உடலில் பூசிக் கொள்வதும், மாட்டு சிறுநீர் குடிப்பது கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்கும் என பலர் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். இவை அனைத்தும் உடலுக்கு மேலும் சில நோய்களை வரவழைக்கும் என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் விமான நிலையத்தில் வைத்து இந்திய பயணி ஒருவரிடமிருந்து பை நிறைய வரட்டி எனும் மாட்டு சாணம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அவற்றை அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். ஏனென்றால் அமெரிக்காவில் மாட்டு சாணம் தடைசெய்யப்பட்ட ஒன்று. இந்த மாட்டு சாணம் மூலம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் தொற்று நோய் ஏற்படும் என்பதால் தான் இவை அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.