எளிய ‘தாத்தா’ பட்டாப்பட்டி ரூ. 15,000க்கு விற்கப்படுகிறது. தற்போது இது ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஷன் பிராண்ட் என்ற இணையதளத்தில் ரூ.15,450 விலையுள்ள ஒரு சாதாரண ஷார்ட்ஸ் இணையத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் ரூ.11,450 மதிப்புள்ள ஒரு சட்டையும் உள்ளது.
“ஏன் இந்த பட்டாப்பட்டி கால்சட்டை 15 ஆயிரம்?” என்ற தலைப்பில் அர்ஷத் வாஹித் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ஷார்ட்ஸில் நீலம் மற்றும் பச்சை நிற கோடுகள், சிவப்பு நிற அவுட்லைனிங் மற்றும் சட்டையில் செக்கர்ட் பிரிண்ட் உள்ளது.
தற்போது இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஷார்ட்ஸுக்கு 15 ஆயிரம் பைத்தியக்காரத்தனமானதுஎன்று பயனர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
unknown node