துருக்கி, சிரியாவில் பலி எண்ணிக்கை 45,000-ஐ தாண்டியது.!

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 45,000 ஜக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 45,000 ஜக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்,மேலும் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் எல்லாம் தரையோடு தரைமட்டமாயின. பல நாடுகள் தொடர்ந்து ஆதரவளித்து வந்த நிலையில், அந்நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள், சொந்த பந்தங்களை இழந்து தவித்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் இதுவரை 45,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 38,000க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 5,800க்கும் மேற்பட்ட மக்களும் இதுவரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.