ஜப்பானில் குறையும் பிறப்பு விகிதம்; எச்சரிக்கும் பிரதமரின் ஆலோசகர்.!

ஜப்பானில் பிறப்பு விகித சரிவைக் கட்டுப்படுத்தாவிட்டால், நாடு அழிந்துவிடும் என பிரதமர் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

ஜப்பானில் பிறப்பு விகித சரிவைக் கட்டுப்படுத்தாவிட்டால், நாடு அழிந்துவிடும் என பிரதமர் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

ஜப்பானில் கடந்த 2022 இல் பிறந்தவர்களை விட இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கிறது, ஜப்பானில் அதிகமான மக்கள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் ஆலோசகர் மசாகோ மோரி கூறும்போது, நாடு பிறப்பு விகிதத்தில் ஆபத்தான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

unknown node

ஜப்பானின் மக்கள்தொகை 2008 இல் உச்சத்தை அடைந்தது மற்றும் அதன் பின்னர் 124.6 மில்லியனாக குறைந்துள்ளது, கடந்த 2022 ஆம் ஆண்டில், ஜப்பான் 8,00,000 க்கும் குறைவான பிறப்புகள் மற்றும் சுமார் 15,80,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதே நிலைமை நீடித்தால் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தொழில் மற்றும் பொருளாதார வலிமை வீழ்ச்சியடையும் என்று எச்சரித்திருந்தார்.

இதனை தடுப்பதற்கு அரசு வேண்டிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். மக்கள் தொகையை மேம்படுத்த, குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தும் என்று கூறியுள்ளார்.