டெல்லி விவசாயிகள் போராட்டம் கவலை அளிப்பதாக உள்ளது – கனடா பிரதமர்!

The Prime Minister of Canada has expressed his concern over the possible farmers' protest against the Agriculture Act in Delhi.

டெல்லியில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெறக்கூடிய போராட்டம் தனக்கு கவலை அளிப்பதாக உள்ளதாகவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தருவதாகவும் கனடா பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளை காணொளி மூலமாக பகிர்ந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் இந்த விவசாயிகளின் போராட்டம் குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் இந்தியாவில் நடை பெறக்கூடிய விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்திகள் குறித்து அதிகம் கேள்விப்படுகிறேன்.

அவர்களின் நிலைமை வருத்தமளிக்கும் வண்ணமாக உள்ளது என தெரிவித்த அவர், தங்களது உரிமைகளுக்காக போராடக்கூடிய விவசாயிகளை பாதுகாக்க கனடா எப்பொழுதும் துணை நிற்கும் எனவும் விவசாயிகள் குறித்த கவலை இந்திய அரசுக்கு பல வழிகளில் தாங்களும் தெரிவித்து வருவதாகவும், அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய இந்த நேரத்தில் விவசாயிகள் நடைபெறக்கூடிய போராட்டத்தை இந்தியாவில் கவனிக்காமல் விட்டால் நான் கடமை தவறியதாக மாறி விடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு தலைவராக இருந்தாலும் இந்தியாவில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது பல விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.