டொனால்ட் ட்ரம்ப் ஒரு தீவிரவாதி! ஈரான் அதிபர் அதிரடி!

Iranian President Hassan Rouhani and US President Trump are illegal. Trump has said he is delighted to be leaving the White House.

ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதி. ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, ஜனநாயக கட்சி வேட்பாளரான  பைடன்   வென்றுள்ளார். இதனை அடுத்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சட்டவிரோதி என்று  அழைத்தார்.

மேலும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பைடனின் வருகையைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ஆனால் பயங்கரவாதம் வெளியேறுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடன் அவர்கள் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.