துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் உயிரிழப்பு! 200க்கும் மேற்பட்டோர் காயம்!

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.

மீண்டும் நிலநடுக்கம்:

unknown node

துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குடியிருப்பாளர்கள் சிக்கியதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம்:

unknown node

துருக்கியின் ஹாத்தே மாகாணத்தில் நேற்றிரவு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பிறகு 32 முறை பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துருக்கி – சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பெரும் பேரழிவு:

unknown node

இந்த நிலநடுக்கம் பெரும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்த பெரும் பேரழிவு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. அதைத் தொடர்ந்து பல அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000ஐ தாண்டியுள்ளது மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். துருக்கிய அதிகாரிகள் 6,000 க்கும் மேற்பட்ட பின்அதிர்வுகளை பதிவு செய்துள்ளனர்.