துருக்கி, சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு இஸ்ரேலிலும் உணரப்பட்டது.
கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து மேலும் பல அதிர்வுகள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,000ஐ தாண்டியுள்ளது.
unknown node