பிரிட்டனில் 18 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழப்பு.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில் பிரிட்டனில் கொரோனா வைரசால் சிகிச்சை பெற்று வந்த 18

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நிலையில் பிரிட்டனில் கொரோனா வைரசால் சிகிச்சை பெற்று வந்த 18 வயதுள்ள நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் இவர்தான் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் பிரிட்டனில் கடந்த 6 நாட்களில் மேலும் 5,683 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லவேண்டாம் என்று அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது. இதனிடையே வேல்ஸில் மேலும் 7 பேரும் ஸ்காட்லாந்தில் மேலும் 3 பேரும் வடக்கு அயர்லாந்தில் வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 48 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளது.