கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்த எலான் மஸ்க்.
உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக மிகவும் பிரபலமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன் பின் ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலருக்கு வாங்க முன் வந்தார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதில் பின்வாங்கினார்.
இந்த நிலையில், இன்று எலான் மாஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ட்விட்டர் தலைமையகத்துக்குள் நுழைகிறேன் என்று தலைப்பிட்டுள்ளார். மேலும் அவர் கைகழுவும் தொட்டியை ஏந்தியவாறு ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார்.
மேலும், மஸ்க் தனது ட்விட்டர் ப்ரொஃபைல் ஹேண்டிலில் தலைமை ட்விட் என்றும் மாற்றியுள்ளார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நாளைக்குள் முடிவுக்கு வந்துவிடும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
unknown node