எலான் மஸ்க் ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை கண்டுபிடித்த பிறகு தான் பதவி விலகுவதாக கூறியுள்ளார்.
இந்த வேலை எடுக்கும் அளவுக்கு முட்டாள்தனமான ஒருவரைக் கண்டால் நான் விரைவில் CEO பதவியை ராஜினாமா செய்வேன்! அதன் பிறகு, நான் மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை நிர்வகிப்பேன் ” என்று மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
unknown nodeகடந்த ஞாயிற்றுக்கிழமை எலான் மஸ்க் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்று கேட்டிருந்தார்.இந்த கருத்துக்கணிப்பு முடிவில் மஸ்க்கிற்கு எதிராக 57.5% பயனர்கள் வாக்களித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக 42.5% பயனர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது தனக்கு பதிலாக வேறு ஒருவரை கண்ட பிறகு பதவி விலக தயார் என்று கூறியுள்ளார்.
unknown node